பாகிஸ்தான் அதிக முறை வெற்றி.. இந்தியாவின் தோல்விகளுக்கு யார் காரணம் தெரியுமா?
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.

ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் மட்டுமே இந்தியா, பாகிஸ்தானை அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.
ஆனால், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. அதற்கு காரணம் இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் தான். இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.
இதில் பாகிஸ்தான் அணி 73 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணி 56 போட்டிகளில் வென்றுள்ளது. 4 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 54.47 ஆகும்.
இந்திய அணியின் வெற்றி சதவீதம் 41.79 ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியா தானே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது என சிலர் நினைக்கலாம்.
இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்று புள்ளி வைக்கும் - வசீம் அக்ரம்
ஆனால், 1990களில் பாகிஸ்தான் அணி தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தது. வேகப் பந்துவீச்சில் அந்த அணியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற நிலைமை இருந்தது.
அப்போது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்று இருந்தது. மேலும், பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிர் போன்ற தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.
அதே சமயத்தில், காபில் தேவ், கவாஸ்கர் தங்கள் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் நிலையில்லாத பார்மில் ஆடிக் கொண்டு இருந்தனர். இந்திய அணியில் அப்போது சரியான வீரர்கள் இல்லை. சச்சின் அப்போது தான் அணியில் அறிமுகம் ஆகி, பின் 90கள் முழுவதும் இந்திய அணி அவரை மட்டுமே நம்பி இருந்தது.
அதனால், பாகிஸ்தான் அணி இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் 24 ஒருநாள் போட்டிகளில் 19 வெற்றியும், வாசிம் அக்ரம் தலைமையில் 17 போட்டிகளில் 12 வெற்றியும் பெற்றது.
பின்னர் கங்குலி கேப்டனாக வந்த பின்னர் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சரி சமமாக வெற்றி பெற்றன. தோனி தலைமையில் தான் இந்தியா அதிக வெற்றிகளை பெற்றது. 18 ஒருநாள் போட்டிகளில் தோனி கேப்டன்சியில் இந்திய அணி 11 வெற்றிகளை பெற்றது.
ஆனால், உலகக்கோப்பை என்று வந்தால் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுக்காது. இது வரை நடந்த ஏழு உலகக்கோப்பை மோதல்களில் இந்தியா அனைத்திலும் வென்றுள்ளது.
அடுத்து அக்டோபர் 14 அன்று நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியிலும், இந்தியா, பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.