4 நாட்களில் உலக அளவில் ரூ.555 கோடி வசூல் செய்த “கல்கி 2898 ஏடி”

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

ஜுலை 1, 2024 - 18:15
4 நாட்களில் உலக அளவில் ரூ.555 கோடி வசூல் செய்த “கல்கி 2898 ஏடி”

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது இந்தப் படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!