கலாமித்திரா விருது விழா...

நிகழ்வின் பிரதம அதிதியாக  புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்துகொண்டார்.

பெப்ரவரி 5, 2025 - 00:05
கலாமித்திரா விருது விழா...

44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம், கடந்த 30.01.2025 இல் 45ஆவது அகவைக்குள் கால் பதித்தது. 

அன்றைய நாளில் இது தனது மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்துடன், அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை கலாமித்திரா விருது விழாவை மிகச் சிறப்பாக  நடத்தி முடித்துள்ளது.

இந்நிகழ்வு, கொழும்பு-11 செட்டியார்தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக  புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்துகொண்டார்.

புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினில் ஊடகத்துறையை சார்ந்த பெண்கள் 10 பேர் கலாமித்திரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!