Krishna Jayanthi: குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

Krishna Jayanthi: நடிகை நயன்தாரா தனது இரு மகன்களான உயிர் மற்றும் உலகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடிய புகைப்படத்தை தற்போது புதிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஆக வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர் 7, 2023 - 14:56
Krishna Jayanthi: குழந்தைகளுடன் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

Krishna Jayanthi: நடிகை நயன்தாரா தனது இரு மகன்களான உயிர் மற்றும் உலகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடிய புகைப்படத்தை தற்போது புதிய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஆக வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன் செம மாஸாக ஜெயிலர் பட பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். 

அதன் பின்னர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் தான் இணைந்து நடித்த ஜவான் படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ட்ரெய்லர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புரோமொட் செய்திருந்தார்.

ஷாருக்கானுடன் திருப்பதியில்

மேலும், நடிகர் ஷாருக்கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. 

தனது கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார் நயன்தாரா.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது இரு குழந்தைகளும் வாழை இலையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது உயிர் மட்டும் உலகம் பட்டு வேட்டி அணிந்து கொண்டு குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரிக்கப்பட்டு பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார்.

ஜவான் ரிலீஸ்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தென்னிந்திய நடிகையாக இதுவரை வலம் வந்த நயன்தாரா இன்று முதல் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். 

பிரீமியர் காட்சிகளை பார்த்துவிட்டு ரசிகர்கள் படம் வேற லெவலில் இருக்கிறது என தற்போதைய கமெண்ட்கள் வரத்தொடங்கியுள்ளன. கண்டிப்பாக இந்த படம் இந்த ஆண்டின் இன்னொரு பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை எனக் கூறுகின்றனர்.

மணிஹெய்ஸ்ட் ஹீரோயின்

ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேலும் பல பாலிவுட் படங்களில் நடிப்பாரா என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸின் ரேக்கல் மரில்லோ கதாபாத்திரம் தான் இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்காக அட்லீ டிசைன் செய்துள்ளாரா? என ஜவான் ட்ரெய்லர் வெளியானதுமே கம்பேர் செய்ய ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். 

விரைவில், எந்த எந்த படங்களின் காட்சிகள் ஜவான் படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்கிற விரிவான அப்டேட்களும் வெளியாகும் என தெரிகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!