முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 'ஜெயிலர்' திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே (11 ) அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே (11 ) அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவ்வாண்டு (2023) இந்தியாவில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியீடு கண்ட முதல் நாளில் ஆக அதிக வசூலை ஈட்டியிருப்பதாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.
திரைப்படம் வெளியீடு கொண்டாட்டங்களுடன் களைகட்டியது. தமிழ்நாட்டில் 900 திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது," எனத் தமிழ்நாட்டின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கூறினார்.
'ஜெயிலர்' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளத்திலும் வெளியீடு கண்ட முதல் நாளில் ஆக அதிக வசூலை ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதோடு 'ஜெயிலர்' திரைப்படம் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆக அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்திருப்பதாக Hindustan Times நாளேடு கூறியது.
இதுவரை இந்தியாவில் திரைப்படம் 52 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.