யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் திருமலை ஊடகர்கள் சந்திப்பு
இதில் யாழ். துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள் மற்றும் திருகோணமலையில் உள்ள ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு, திருகோணமலையில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நேற்று (17) மாலை நடைபெற்றது.
இதில் யாழ். துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இந்மச் சந்திப்பில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் தொடர்பிலும் இலங்கை - இந்தியா உறவு தொடர்பிலும் நீண்ட நேரமாக பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வட,கிழக்கு மக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது, சிறுபான்மை இன கட்சிகளின் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறான தாக்களை செலுத்தப்போகிறார் என்பது பற்றியும் இது சிறுபான்மை சமூக சாதக, பாதக விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இலங்கை - இந்திய தொடர்பில் அரசியல் ரீதியான உறவு சுற்றுலாத் துறை அபிவிருத்தி, ஊடகவியலாளர்களுக்கான எதிர்கால பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களுடைய சமூக, பொருளாதார பிரச்சினைகள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பிலும் மேலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
(ஹஸ்பர் ஏ.எச்)