வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 24, 2024 - 13:01
வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த வீட்டின் கதவு மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!