ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா? வெளியான தகவல்!

ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில்,  ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக உள்ளது.

ஏப்ரல் 8, 2024 - 15:39
ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா? வெளியான தகவல்!

ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்று (08) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில்,  ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக உள்ளது.

எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருந்தாலும், அது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு விடுமுறை தினமாக மாற்ற வேண்டுமாயின் அமைச்சரவை தீர்மானம் தேவை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!