இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை இன்று முற்பகல் வந்தடைந்தார்.

ஏப்ரல் 24, 2024 - 14:56
இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(24)  இலங்கையை வந்தடைந்தார்.

ஈரான் ஜனாதிபதி, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை இன்று முற்பகல் வந்தடைந்தார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் அவர், இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ள உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஈரான் - இலங்கை ஜனாதிபதிகளின் பங்கேற்புடன் 5 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும்.

அதன்பின்னர் ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் விசேட உரையாற்றவுள்ளனர்.

2021 ஆம் ஆண்டிலிருந்து ஈரானின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கலாநிதி இப்ராஹிம் ரைசி, முன்னதாக அந்நாட்டின் பிரதம நீதியரசாக கடமையாற்றியிருந்தார்.

அத்துடன், கலாநிதி ரைசி 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஈரானின் சட்டமா அதிபராக பதவி வகித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னரே அவர் இன்று இலங்கைக்கு வருகை தந்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!