ஐ.பி.எல். இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் தெரியுமா? வெளியான தகவல்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

மார்ச் 24, 2024 - 14:33
ஐ.பி.எல். இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் தெரியுமா? வெளியான தகவல்

ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22-ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. 
இதன் முதலாவது ஆட்ட்த்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 17 நாட்களுக்கான ஐ.பி.எல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 
அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளன. 2-வது கட்ட அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!