சிஎஸ்கேவில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதியுடன் விலகும் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் சோகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஏப்ரல் 30ஆம் தேதி உடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார். 

ஏப்ரல் 11, 2024 - 10:22
சிஎஸ்கேவில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதியுடன் விலகும் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் சோகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஏப்ரல் 30ஆம் தேதி உடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார். 

ஐபிஎல் 17வது சீசன் முடிந்து ஒரு வாரத்தில் ஜூன் 1ம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இந்த தொடர் நடைபெற உள்ளதால் இதற்கான விசா பயோமெட்ரிக் சோதனைக்காக முஸ்தாபிஸூர் தற்போது அவரது நாட்டிற்கு திரும்பியுள்ளார். 

முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024ல் அதிக விக்கெட் எடுத்தவராகவும், சென்னை அணிக்கு முக்கியமான பவுலராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் சில போட்டிகளில் அவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும்.

அத்துடன், முஷ்தபிசுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே, ஐபிஎலில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதியை நீட்டிக்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வங்கதேச அணி, மே 3ஆம் தேதி முதல் சிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி இருப்பதால், முஷ்தபிசுரை ஏப்ரல் 30ஆம் தேதி, நாடு திரும்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கேவில் முஷ்தபிசுருக்கு மாற்றான வெளிநாட்டு பௌலர் இல்லை. ஷர்தூல் தாகூர், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேர் ஆகிய உள்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான், முஷ்தபிசுருக்கு மாற்றாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!