நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு துடுப்பாட்டம் தேர்வு
IPL 2024 News in Tamil: தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

IPL 2024 News in Tamil:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 26 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.