பாடசாலைகளில் AI சங்கங்களை நிறுவ அனுமதி!
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒரு முன்னோடித் திட்டமாக, தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI)தொடர்பான மாணவர் சங்கங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த முன்னோடித் திட்டம் இலக்குகளை எட்டும்பட்சத்தில், எதிர்வரும் ஆண்டுகளில் ஏனைய பாடசாலைகளுக்கும் அதை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால உலகளாவிய போக்குகளை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு திறம்பட பங்களிக்கக்கூடிய குடிமக்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொடர்பான படிப்பில் ஈடுபட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பது பொருத்தமானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி முறைக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அமைச்சரவை அனுமதி விவரம் இதோ :