தரம் 5 புலமைப்பரிசில் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

இந்த நாளிலும் மேற்படி நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தலை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர விடுத்துள்ளார்.

செப்டெம்பர் 9, 2024 - 12:51
தரம் 5 புலமைப்பரிசில் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ளது. 

நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இந்த நாளிலும் மேற்படி நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தலை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர விடுத்துள்ளார்.

அதாவது, இந்த நாளிலும் நேரத்திலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விசேட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை 323,879 மாணவர்கள் எழுதவுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!