மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், எரிசக்தி வல்லுநர்கள் மற்றும் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களும் தங்கள் கருத்துக்களை வழங்கி உள்ளனர்.
மின் கட்டணத்தை இருபது முதல் முப்பத்தேழு சதவீதம் வரை குறைக்க வேண்டும் என அவர்களில் பெரும்பாலானோர் கூறியதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10ம் திகதியுடன் பொதுமக்கள் கருத்து கேட்பு முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.