அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!
10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை எண்ணிக்கையை 45 நாள்களில் இருந்து 25 நாள்களாக குறைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை, 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை திருத்தம் செய்யுமாறு ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம், திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, ஓய்வூதியச் செலவு அரச செலவீனத்தில் 11.4% என சுட்டிக்காட்டியுள்ள ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம், செலவினங்களை நிர்வகிப்பதற்கு அனைத்து பொதுத் துறையினரும் பங்களிக்க வேண்டுமென துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.