மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்டுள்ள தகவல்
இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கான காரணம் தொடர்பில் இன்னும் தனக்கு தெளிவாகவில்லை என அவரின் மனைவி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
மேர்வின் சில்வா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் உள்ள அரச காணியொன்று, போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்த போது, 4 பேர் அடையாள அட்டையை காட்டியதுடன், அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.