சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று  என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நவம்பர் 12, 2023 - 21:03
நவம்பர் 12, 2023 - 21:04
சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

கீரி சம்பா அரிசிக்கு சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று  என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி உள்ள போதும், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கையிருப்பை மறைத்து சந்தைக்கு விநியோகிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகின்றது.

முன்னதாக கீரி சம்பா அறுவடை குறைவாக காணப்பட்ட போதிலும் கடந்த பெரும்போகத்தில் கீரி சம்பா அறுவடை செய்யப்பட்டதன் காரணமாக நெல் மற்றும் அரிசி இருப்பு குறையவில்லை.

இந்த நிலையில், அரிசியை பதுக்கிவைப்பவர்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மேலும், வரும் போகத்தில் அதிகளவு கீரி சம்பா அரிசியை பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்குமாறும் விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்த போதிலும், தற்போது கீரி சம்பா அரிசி 305 முதல் 310 ரூபாய் வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!