விசேட செய்தியுடன் இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இன்று (20) முற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 109 வீடுகளையும் இணைய வழியில் உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புதுடெல்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெய்சங்கரின் விஜயம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.