சேப்பாக்கத்தில் அதிரவிட்ட சுப்மன் கில்: "டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செட் ஆகமாட்டேனா?" - தரமான சம்பவம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது. 

செப்டெம்பர் 21, 2024 - 17:56
சேப்பாக்கத்தில் அதிரவிட்ட சுப்மன் கில்: "டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செட் ஆகமாட்டேனா?" - தரமான சம்பவம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது. 

டாஸ் வென்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ பந்துவீச்சு செய்யத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியா, 376 ரன்கள் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். அதன்பின் விளையாடிய வங்கதேசம், இந்திய பந்துவீச்சின் முன் தாங்க முடியாமல் 149 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்தியா, மூன்றாம் நாளில் 4 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்த இன்னிங்ஸில் சுப்மன் கில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் குவித்தனர். 

இதனால் 515 ரன்கள் இலக்குடன் வங்கதேசம் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சுப்மன் கிலுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. 

அவரை டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வேண்டும் என கருத்துக்கள் வந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 176 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அடித்து 119 ரன்கள் குவித்தார். சுப்மன் கிலின் ஆட்டம், அவரை விமர்சித்தவர்களுக்கு தரமான பதிலாக அமைந்தது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!