சூப்பர் 8ல் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் மூன்று அணிகள்... வெளியானது பட்டியல்!
சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி மூன்று அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளுக்கு எதிராக ஜூன் 5, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது.
லீக் சுற்றில், இந்திய அணி வெற்றியைப் பெறும் பட்சத்தில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, யார் யாருக்கு எதிராக விளையாடும், எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, பலமிக்க அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகதான் விளையாடும்.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஜூன் 20ஆம் தேதியும், இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஜூன் 22ஆம் தேதியும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜூன் 24ஆம் தேதியும் நடைபெறும்.
மூன்று அணிகளுக்கு எதிரான ஆட்டமும், இரவு 8 மணிக்கு துவங்கும் வகையில்தான் அட்டவணை இருக்கும் எனக் கருதப்படுகிறது. இலங்கைக்கு எதிரான ஆட்டம் மட்டும், காலை 6 மணிக்கு துவங்க வாய்ப்புள்ளது.