2011 உலக கோப்பை நினைவு இருக்கா? இந்தியா அடைந்த ஒரே தோல்வி இவங்க கூட தான்!
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்காவை மட்டும் எதிர்கொண்டு தோல்வியை தழுவியது.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தான் அசுர பலத்தில் இருக்கிறது.
இதில் தென்னாப்பிரிக்க அணி பலம் குன்றிய நெதர்லாந்திடம் தோல்வியை தழுவி சறுகினாலும் மற்ற அணிகளை வதம் செய்து தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றியைப் பெற்றாலும் கடும் சவால்களை இதுவரை எந்த அணியும் ரோகித் படைக்கு கொடுக்கவே இல்லை.
இந்தியாவுக்கு சவால்கள் கொடுக்க வேண்டும் என்றால் அது தென்னாப்பிரிக்காவால் மட்டுமே முடியும் என்று பல கிரிக்கெட் விமர்கர்களும் கருதுகின்றனர்.
காரணம் தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருக்கிறது.
பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்று பிரிவிலும் சிம்ம சொப்பனமாக எதிரணிக்கு தென்னாப்பிரிக்கா வீரர்கள் விளங்குகின்றனர். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போல் இந்திய அணி சொந்த மண்ணில் நடப்பு உலகக் கோப்பை தொடரை விளையாடி வருகிறது.
இதனால் அந்த உலகக்கோப்பை தொடரை வென்றது போல் இம்முறையும் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தென்னாப்பிரிக்காவை மட்டும் எதிர்கொண்டு தோல்வியை தழுவியது.
இங்கிலாந்துக்கு எதிராக டிராவை அந்த தொடரில் பெற்றாலும் தோல்வி என்பது தென்னாப்பிரிக்காவிடம் மட்டும்தான் இருந்தது. தற்போது அதே பாணியில் இந்திய அணி இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடையுமா? இல்லை வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி தோல்வியை தழுவும் பட்சத்தில் 2011 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றது போல் இம்முறையும் இந்தியா வெல்லுமா? இல்லை சமீப காலமாக தென்னாப்பிரிக்காவிடம் அடையும் தோல்விக்கு இந்தியா பழித்தீர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.