விராட் கோலி விலக என்ன காரணம்? – இது தான் காரணமா? வெளியான தகவல் இதோ!
விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், நட்சத்திர வீரரான விராட் கோலி தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்த தகவலை வெளியிட்ட பிசிசிஐ, விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகியள்ளதாக தெரிவித்திருந்தது.
ஆனாலும் விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இதையும் படிங்க : திடீரென விலகிய விராட் கோலி... அணிக்குள் வர இந்த வீரர்களுக்கு வாய்ப்பு... யாருக்கு தெரியுமா?
விராட் கோலி மிகச் சிறப்பான ஃபார்மில் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இப்படி திடீரென அணியிலிருந்து கடைசி நேரத்தில் விலக என்ன காரணம்என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக பிரசவத்திற்காக காத்திருக்கிறார் என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் பிரசவம் நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா உடல் பருமனாக காணப்பட்டது.
மனைவி கர்பமாக இருப்பதால் விராட் கோலிஅவரை கவனித்துகொள்ளவே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணத்தை முடித்த இந்த ஜோடிக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.