திடீரென விலகிய விராட் கோலி... அணிக்குள் வர இந்த வீரர்களுக்கு வாய்ப்பு... யாருக்கு தெரியுமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
ஏற்கனவே ஹைதராபாத் சென்றடைந்த இரண்டு அணி வீரர்களும் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி திடீரென முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே கோலி விலகியுள்ளதாகவும் அவரின் தனியுரிமையை ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் வறான கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளுக்கான டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையும் படிங்க : 5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நாளில் வளைகாப்பு நடத்திய 22 வயது இளைஞன்!
அண்மைய காலமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இளம் வீரர்களை ஆதரித்து வரும் வேளையில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதன் காரணமாக விராட் கோலிக்கு பதிலாக ஒரு இளம் வீரரே அந்த இடத்திற்காக தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்படுகிறது.
தற்போதைய இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரஜத் பட்டிதார், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான வாய்ப்பிற்காக காத்திருப்பதால் அவர்களில் ஒருவரே இந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
அதிலும் கடந்த சில ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கானை இந்திய அணி தேர்வு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.