மலையக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜுலை 4, 2023 - 12:59
மலையக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரை வெளியேற்றுவதற்காக நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் நேற்று (03) திறக்கப்பட்டன.

அந்தவகையில், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமலசுரேந்திர நீர்தேக்கமும் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்றுக் காலை முதல் வான் மேவி பாய்கின்றது.

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!