சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 23, 2023 - 11:49
ஒக்டோபர் 23, 2023 - 11:52
சீரற்ற வானிலை ; சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி - 2,087 குடும்பங்கள் பாதிப்பு; இன்றும் பலத்த மழை பெய்யும்!

சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!