ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம்; அறிவிப்பு வெளியானது!
புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் வருடம் (2024) ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் மீண்டும் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இதனை சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: 97 பொருட்களுக்கு வற் வரி விதிப்பு... இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி
அத்துடன், எதிர்வரும் 12 ஆம் அல்லது 13 ஆம் திகதிகளில் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கூறி உள்ளார்.