5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

பல நடிகைகள் தற்போது தங்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி வேறு ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றனர். 

ஆகஸ்ட் 4, 2024 - 11:49
5 நிமிடம் நடிக்க 2 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

அண்மை காலமாக பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நடிகை, நோரா ஃபட்டேகி. 32 வயதாகும் இந்த நடிகை ஹிந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார். 

2014 ஆம் ஆண்டு சித்திரை உலகுக்குள் நுழைந்த இவர் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களின் நடித்து வந்தார். பின்பு தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்து டான்ஸ் ஆடினார். 

இது அவருக்கு நன்றாக வொர்க் அவுட் ஆக தொடர்ந்து அதே போல பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். 

இதில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் இவர் இடம்பெற்று இருந்தது தான் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. அதில் வரும் மனோகரி பாடலில் நடனமாடும் மூன்று பெண்களின் இவரும் ஒருவர்.  

பல நடிகைகள் தற்போது தங்கள் படங்களில் நடிப்பது மட்டுமின்றி வேறு ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றனர். 

ஜேஜே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா கோத்தாரி, கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு பாடலில் ஆடி இருந்தார். 

அதேபோல, நடிகை அஞ்சலியும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கு தற்போது சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் நோரா ஃபட்டேகி. 

இவர்,5 நிமிட பாடலுக்கு நடனமாட, 2 கோடி சம்பளமாக கேட்கிறாராம். இந்த சம்பள தொகையை கொடுத்து அவரை ஆட வைக்க தயாராக இருக்கிறார்களாம், சில படக்குழுவினர். 

இதையடுத்து நேரா ஃபட்டேகியின் காட்டில் ஒரு பண மழை பொழிவதாக கூறப்படுகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!