நலிவுற்ற குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் நலிவுற்ற குடும்பங்களில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு மக்கள் நல செயல்பாடுகள், சேர்கிள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு அமைவாக, செங்கலடி ஏறாவூர் பற்று, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, மண்முனை மேற்கு மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
இவ் வேலை திட்டத்தின் மூலம் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஆரோக்கியமான உரையாடல்களை ஊக்குவித்தல், அமைதியை கட்டியெழுப்புவதில் வலுப்பட்டத்ததப்பட்ட பெண்களின் பங்களிப்பு எனும் உயர் எண்ணங்களின் அடிப்படையில் இத்திட்டம் யுனப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் சேர்கிள் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் பயனாளிகளுக்கான நிதி பங்களிப்பு வழங்கும் நிகழ்வு, சேர்கிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தலைமையில் நடைபெற்றது.
இம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெவ்வேறு நிகழ்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகங்களின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவகர்கள், என முக்கிய அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கினர்.
(எம்.ரீ.எம்.பாரிஸ்)