கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய கூறியுள்ளார்.
“தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அப்போதைய புகைப்படத்திற்கும் இப்போதைய புகைப்படத்துக்கும் மாற்றங்கள் நிறையவே காணப்படும். அதில் பல சிக்கல்கள் உள்ளன.
அத்துடன், கடவுச்சீட்டினை பெறும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தேசிய அடையாள அட்டை பயன்படுத்தப்படுகின்றது. இதேவேளை, 2025ம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகைகள் இதில் முதலிடம் பெரும்” என்றார்.