முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை குறைக்கப்படாவிட்டால் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க, தற்போது சந்தையில் 50 ரூபாய்க்கு முட்டைகள் வாங்க முடியும் என்றார்.
இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.