பரீட்சை தொடர்பில்  வெளியான முக்கிய அறிவிப்பு... விவரம் இதோ!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தி முடித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நவம்பர் 22, 2023 - 00:37
நவம்பர் 22, 2023 - 00:41
பரீட்சை தொடர்பில்  வெளியான முக்கிய அறிவிப்பு... விவரம் இதோ!

எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அச்சுப்புத்தகம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மேலும் 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக பண வவுச்சர் வழங்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

நாடாளுமன்றில் இன்று(21) உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியதுடன், உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.  

இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்ததாக கூறிய அவர், அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தி முடித்துள்ளதாக குறிப்பிட்டார்.

“கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விடைத்தாள் பதிப்பிடும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டதால் 3 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் உயர்தர பரீட்சை இந்த மாதம் ஆரம்பிக்கவே தீர்மானித்திருந்தோம்” என்றும் அவர் கூறினார்.

அத்துடன், “நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றபோதும் தற்போது படிப்படியாக ஸ்த்திர நிலைக்கு வருகிறது. அதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் பாடசாலைகளுக்கான அச்சுப்புத்தகங்களுக்காக 19 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அச்சுப்புத்தகம் அச்சிடும் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது ஜனவரியாகும் போது அனைத்து பாடசாலைகளுக்கும் அச்சுப்புத்தகம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக பண வவுச்சர் வழங்க தீர்மானித்திருக்கிறோம். அதேபோன்று ஆரம்ப பிரிபு மாணவர்களுக்கு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக 16 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது” எனறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!