உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, 2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியாகும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியில் ஏற்பட்ட தாமதத்தினால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.