பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு கடினமானது... ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கா?
ஆனால் ஆப்கானிஸ்தான அணி இலங்கை ,நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.

தொடர் தோல்வியால் ஐசிசி உலக கோப்பை அரை இறுதி போட்டிக்கு தெரிவாவதில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.
ஒவ்வொரு அணிகளும் ஒன்பது லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
தற்போது பாகிஸ்தானை பொறுத்தவரையில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டு ஆட்டங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 4 புள்ளிகளுடன் அவர்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும் அரை இறுதி வாய்ப்பு கடினமாக மாறிவிட்டது.
ஏனென்றால் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி இரண்டில் தான் வென்று இருக்கிறது.
அதாவது எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் இனி பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர்களால் அதிகபட்சமாக ஆறு போட்டிகளில் 12 புள்ளிகள் தான் பெற முடியும்.
மேலும் அவர்களுடைய ரன் ரேட்டும் மைனஸ் 0.40 என்ற அளவில் இருக்கிறது. பாகிஸ்தான் இனி அடுத்ததாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
பிறகு வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து என விளையாட வேண்டிய நான்கு போட்டிகளுமே பெரிய அணிகள் கூட தான். இந்த நான்கில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோற்றால் கூட அவர்கள் வீடு திரும்ப வேண்டியதுதான்.
அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி அதே நான்கு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.அவர்கள் எஞ்சிய நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகள் பெற்று இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு சாதகமான முடிவு கிடைத்தால் கூட ஆப்கானிஸ்தான் அணியால் அரை இறுதிக்கு செல்ல முடியும்.
ஆனால் ஆப்கானிஸ்தான அணி இலங்கை ,நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இதில் நெதர்லாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினாலும் மற்ற மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமாகும். எனினும் கிரிக்கெட்டில் நாம் நினைக்க முடியாத அதிசயங்கள் எல்லாம் நடக்கும். அப்படி நடந்தால் ஆப்கானிஸ்தானை நாம் அரை இறுதியில் பார்க்கலாம்.