இந்த 4 அணிகள் தான் உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு செல்லும்.. ஆஸி. ஜாம்பவான் கருத்து
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறுகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை யார் வெல்வார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறுவதால் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் அரை இறுதிச் சுற்றுக்கு யார் முன்னேறுவார் என்பது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆருடம் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னைப் பொறுத்தவரை நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. ஒரு அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என நான் நினைக்கிறேன்.
மற்றொரு அரையில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து பலப் பரிட்சை நடத்தும். தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து முடிந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி நிறைய விஷயங்கள் குறித்து கற்றுக் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
உலக கோப்பைக்கு முன்பு இந்தியாவில் ஆஸ்திரேலியா விளையாட போகும் 3 ஒரு நாள் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் தற்போது பலம் வாய்ந்த அணியையே ஆஸ்திரேலியா களமிறங்கிறது. உலகக்கோப்பை பொறுத்தவரை நான் மேலே சொன்ன நான்கு அணிகள் அரை இறுதிக்கு வரும்.
ஆனால் யார் கோப்பையை வெல்வார்கள் என்பதை கணிக்க முடியாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மைதானங்களில் ஆடம் சாம்பா பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் இந்தியாவில் அவருக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள் கிடைக்கும். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். தன்னுடைய திறமையை வரும் ஐம்பது ஓவர் உலகக்கோப்பையில் நிச்சயம் அவர் வெளிப்படுத்துவார்.
இந்தியாவில் விளையாடிய அனுபவம் பல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தற்போது இருக்கிறது. அந்த அனுபவங்களையும் அறிவையும் வைத்து ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை போட்டியை எதிர்கொள்ளும்.
இப்போது உலகம் முழுவதும் உள்ள பேட்ஸ்மேன்கள் தற்போது பயமில்லாமல் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதனால் இந்த உலக கோப்பைத் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால்களாக தான் இருக்கும்.
தென்னாப்பிரிக்க தொடரில் வார்னர் நன்றாகவே பேட்டிங் செய்தார். உலகக்கோப்பை தொடரில் அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். சிலர் வார்னர் நடுவரிசையில் விளையாட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
என்னை கேட்டால் அவர் தொடக்க வீரராக தான் களமிறங்க வேண்டும். தென்னாப்பிரிக்கா தொடரிலே தம்மால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை வார்னர் காட்டி இருக்கிறார்.
தற்போது உள்ள ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டும்தான் அதிக அனுபவத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார். தொடக்கத்தில் வார்னர் விளையாடினால் அது நிச்சயம் எதிரணிக்கு பயத்தை கொடுக்கும் என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.