இந்திய அணி குறித்து உண்மையை உடைத்த வாசிம் அக்ரம்? என்ன சொன்னார் தெரியுமா?
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

2023 உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய முதல் ஐந்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
ஐந்தாவது லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்திய நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
இந்திய அணி குறித்த அவரது இந்த விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவியது. பலரும் வாசிம் அக்ரம் இந்தியாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்திய அணி கட்டுப்பாடே இல்லாமல் இருக்கிறது என கூறி இருக்கிறார் என நினைத்து வாசிம் அக்ரம் கருத்துக்கு எதிராக பேசினார்கள். ஆனால், உண்மையில் வாசிம் அக்ரம் இந்திய அணியை பாராட்டியே பேசி இருக்கிறார்.
"இந்தியா பிரேக் பிடிக்காத ரயிலைப் போல செல்கிறார்கள், அவர்களிடம் ஆயுதங்கள் (நல்ல வீரர்கள்) உள்ளன, தகுதி, திறன்கள் உள்ளன.அது மட்டுமின்றி, மிக முக்கியமாக தங்களின் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும்." என்று இந்திய அணியை பாராட்டினார் வாசிம் அக்ரம்
மேலும், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். பாண்டியா இல்லாததால் பேட்டிங்கில் சமநிலையை கொண்டு வர ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
அது பற்றி பேசிய வாசிம் அக்ரம், "அவர்கள் சூழ்நிலை காரணமாக ஒரு மாற்றத்தை செய்தார்கள். இந்தியா, நியூசிலாந்து அணிகள் போல பிட்ச் அல்லது எதிரணிக்கு ஏற்ப ஒருவரை ஆட வைக்க வேண்டும் என்றால் அணியில் அதற்கு ஏற்ற வீரர்கள் இருக்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஷமி சேர்க்கப்பட்டார். அவர் தன் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.. என்ன மாதிரி சேஸிங் அது (இந்திய அணியின் சேஸிங்). எந்த அழுத்தமும் இல்லை.
விக்கெட்கள் விழுந்தன. ஆனால், இந்தியா எளிதாக ஆடியது. தன் கட்டுப்பாட்டில் போட்டியை வைத்து இருந்தது. இது இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் ஒரு சிறந்த அடையாளம்" என குறிப்பிட்டார்.