ஆஸ்திரேலியா கூட செய்யாத சாதனை.. இந்திய அணி உச்சகட்ட சாதனை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.

ஒக்டோபர் 12, 2023 - 11:35
ஆஸ்திரேலியா கூட செய்யாத சாதனை.. இந்திய அணி உச்சகட்ட சாதனை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம், உலகக்கோப்பையில் 250 ரன்களுக்கும் மேல் உள்ள இலக்கை ஏழாவது முறையாக இந்திய அணி எட்டி இருக்கிறது.

இதுவரை நடந்துள்ள உலகக்கோப்பை தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய அணிகளில் ஆஸ்திரேலியா முதன்மையானது. 

ஐந்து முறை உலகக்கோப்பை வென்ற ஒரே அணி அது தான். அந்த அணி கூட 250 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்குகளை ஐந்து முறை தான் எட்டி உள்ளது.

ஆனால், இந்திய அணி சர்வ சாதாரணமாக ஏழு முறை 250 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்குகளை எட்டி இருக்கிறது. இதன் மூலம், சேஸிங்கில் பலமான அணி என்றைக்கும் இந்தியாதான் என்பதை பதிவு செய்துள்ளது.

2015 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 288 ரன்கள், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 275 ரன்கள், 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 274 ரன்கள், 2023இல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 273 ரன்கள், 2019 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக 265 ரன்கள் ஆகிய சேஸிங்குகளை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்த சேஸிங் வெற்றிகரமாக நடக்க முக்கிய காரணம் ரோஹித் சர்மா தான். அவர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 84 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார். 16 ஃபோர், 5 சிக்ஸ் அடித்தார்.

இஷான் கிஷன் 47, விராட் கோலி 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் எடுத்தனர். இந்தியா 35 ஓவர்களில் எல்லாம் சேஸிங்கை முடித்து போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!