வீடு ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட கணவன், மனைவி 

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் 17, 2025 - 11:04
மார்ச் 17, 2025 - 11:04
வீடு ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட கணவன், மனைவி 

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் பின்னர் குறித்த சடலங்கள் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் அண்மைய காலமாக தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வந்து நான்கு நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!