இழுத்து மூடப்பட்ட மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது... இருவருக்கு எயிட்ஸ்
130 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இயங்கிவரும் விபசார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 130 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதிகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, சீதுவ மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த சோதனையில் 137 பெண்கள் மற்றும் 8 ஆண்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததாக அவர் குறிபிட்டார்.