பெண்கள் சிறையில் ஹிருணிகா; கைதி எண் வழங்கப்பட்டது
தற்போது பெண் கைதியின் சீருடையை அணிந்துள்ள அவரின் பெயருக்கு பதிலாக கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது பெண் கைதியின் சீருடையை அணிந்துள்ள அவரின் பெயருக்கு பதிலாக கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசேட சிறைபிரிவுக்கு மாற்றுமாறு ஹிருணிக்கா கோரிக்கை விடுக்காததால் அவரை விசேட சிறைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும், ஹிருணிகாவின் தீர்ப்பு தொடர்பில் மேல்முறையீடு செய்ய அவரது சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரும் வாரத்தின் முதல் சில நாட்களுக்குள் மனு தாக்கல் செய்து அவர் பிணை பெற முடியும் என்று சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.