சாதாரணத்தர பெறுபேறு வெளியீட்டு திகதி குறித்து புதிய அறிவிப்பு இதோ!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் பொய்யானவை என அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உயர்தர மாணவர்களுக்கு வரவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு
அத்துடன், எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.