கொழும்பில் பெய்த கடும் மழை; பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
கொச்சிகடை, ஆர்மர் வீதி, கிரான்ட்பாஸ் உட்பட பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

கொழும்பில் இன்று (07) பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கொச்சிகடை, ஆர்மர் வீதி, கிரான்ட்பாஸ் உட்பட பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்தும் வீழந்துள்ளன. கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை, தேஸ்டன் கல்லூரி மற்றும் விஜேராம விகாரை உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.