பயிற்சியை தொடங்கிய ஹர்திக் பாண்டியா.. இந்திய அணிக்கு எப்போது வருகிறார் தெரியுமா?
உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது.

உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டது.
வெறும் 3 பந்துகளில் வீசிய நிலையில், களத்தில் இருந்து வெளியேறி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்த போது, காலில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் கால் அதிகளவி வீங்கியதால், உடனடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள் ஹர்திக் பாண்டியாவை தீவிரமாக கண்காணித்து வந்தார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருப்பினரும் அவருக்கு பதிலாக வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவரும் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நேற்று முதல் என்சிஏவில் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். வலைபயிற்சியில் சில ஓவர்களை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா, பின் உள் அரங்கில் வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா காயத்தில் பிசிசிஐ எந்த அவசரமும் காட்டவில்லை.
இந்திய அணி வெற்றிப்பாதையில் பயணித்து வருவதால், நாக் அவுட் போட்டிகளுக்குள் ஹர்திக் பாண்டியா தயாரானால் போதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த இரு போட்டிகளில் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மும்பையிலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கொல்கத்தாவிலும், நெதர்லாந்து அணிக்கு எதிரான பெங்களூருவிலும் விளையாடவுள்ளது.
ஏற்கனவே பெங்களூருவில் உள்ள ஹர்திக் பாண்டியா, நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியுடன் இணைவார் என்று பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஷர்துல் தாக்கூரை தயார்ப்படுத்தும் வகையில் அவருக்கு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.