ஹர்திக், நடாஷா விவாகரத்து காரணம் இதுதான்: வெளியான தகவல்!

கடந்த சில மாதங்களாகவே, ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் விவாகரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மையாகி உள்ளது.

ஜுலை 19, 2024 - 11:30
ஹர்திக், நடாஷா விவாகரத்து காரணம் இதுதான்: வெளியான தகவல்!

கடந்த சில மாதங்களாகவே, ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் விவாகரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மையாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவருக்கும் 2020ஆம் ஆண்டில்தான் திருமணம் நடைபெற்றது. அதற்குமுன், இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தனர்.

குழந்தை பிறப்பதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஹர்திக் திருமண வாழ்க்கை சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஹர்திக்கிற்கும், நடாஷாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

சமீபத்தில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கினார். அதேபோல், ஹர்திக் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படங்களையும் நீக்க ஆரம்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளின்போதும் நடாஷா தென்படவில்லை. எப்போதுமே, நடாஷாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்தைகளை தெரிவிக்கும் ஹர்திக் பாண்டியா, இம்முறையும் தெரிவிக்கவில்லை.​

அதுமட்டுமல்ல, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பிரச்சினை நிலவி வரும் நிலையில், ஹர்திக்கிற்கு ஆதரவாக ஒரு கருத்தை கூட நடாஷா தெரிவிக்கவில்லை. இதன்மூலம், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், தற்போது ஹர்திக், நடாஷா இருவரும் விவாகரத்து முடிவினை எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 

நடாஷா தன்னுடனே இருக்க வேண்டும் என ஹர்திக் விரும்புவதாகவும், ஆனால் நடாஷா அவ்வபோது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, எப்போதாவதுதான் ஹர்திக்கை சந்திப்பதாகவும், இதனால்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா, நடாஷா இருவரும் இணைந்துதான் சொத்துகளை நிர்வகித்து வருகிறார்கள். இருவருக்கும் 165 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும், நடாஷாவுக்கு 100 கோடி ரூபாய் சொத்துகளை ஹர்திக் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!