சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி வீரரருக்கு தோனி கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கெ அணிகாக 9 போட்டிகளில் விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

மே 4, 2024 - 13:07
சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி வீரரருக்கு தோனி கொடுத்த ஸ்பெஷல் பரிசு!

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

அதேசமயம்,  நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் ருதுராஜ் கெய்க்வட் தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய 5 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. 

மேலும் இத்தொடரில் இனிவரும் நான்கு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் தான் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் தற்போது தாயகம் திரும்பியுள்ளர். வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் வங்கதேச அணி சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவுள்ளது. 

முஸ்தஃபிசூர் ரஹ்மான் வங்கதேச அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என்பதால், அவர் வங்கதேச அணியில் இடம்பிடிப்பது அவசியமாகும். இதன் காரணமாக முஸ்தஃபிசூர் ரஹ்மான் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கெ அணிகாக 9 போட்டிகளில் விளையாடிய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

தற்போது முஸ்தஃபிசூர் ரஹ்மான் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் தயாகம் திரும்பிய முஸ்தஃபிசூர் ரஹ்மானிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், 5 முறை கோப்பையை வென்று கொடுத்த வீரருமான மகேந்திர சிங் தோனி தனது கையொப்பமிட்ட ஜெர்ஸியை பரிசளித்துள்ளார். 

இதனை முஸ்தஃபிசூர் ரஹ்மான் தனது சமூகவலை தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவுசெய்துள்ளார். அவரது பதிவில், “எல்லாவற்றிற்கும் நன்றி  மகேந்திர சிங் தோனி. உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் விளையாடியது சிறப்பான உணர்வாக இருந்தது. 

ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கும்,  உங்களது அறிவுரைகளுக்கும் நன்றி. விரைவில் உங்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!