கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது
கிராம உத்தியோகத்தர்கள் தேர்தல் உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றுவதால், தேர்தல் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி, பொதுச் சேவைகளை வழங்குவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு மற்றும் கறுப்புப் போராட்ட வாரம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையும் என கிராம சேவை உத்தியோகத்தர்களின் கூட்டமைப்பின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை கிராம மட்ட சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்கள் தேர்தல் உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றுவதால், தேர்தல் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி, பொதுச் சேவைகளை வழங்குவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிராம அலுவலர் சேவை யாப்பு மற்றும் கிராம அலுவலர் கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஒகஸ்ட் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கறுப்புப் போராட்ட வாரம் முன்னெடுக்கப்பட்டது. த்தை ஆரம்பித்திருந்த நிலையில்