மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை உயர்வு
வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலை 5% முதல் 6% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தலின் விலை குறைந்தது 106 ரூபாயினால் அதிகரிக்கும்.
ஏனைய வகை மதுபானங்களின் விலையும் 5 வீதத்தால் அதிகரிக்கும்.
இதேவேளை, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சிகரெட்டுகளின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.