போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ள அரச சேவையாளர்கள்
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் 12 மணி முதல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று நண்பகல் 12 மணி முதல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
இதனை அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
20,000 சம்பள அதிகரிப்பு, ஜனவரி மாதம் முதல் மேலதிக கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்குதல், 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த ஓய்வூதிய உரிமையை மீளப்பெறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதில் அளிக்காவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சந்தன சூரியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.