கொழும்பில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (24) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஜுன் 24, 2023 - 22:37
கொழும்பில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (24) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அண்மையில் 22 கரட் தங்கத்தின் விலையானது 160,000 ரூபாய் என்ற நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மீண்டும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகிறது.

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது மேலும் குறைந்து 149,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. 

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 161,000 ரூபாயாக காணப்படுகிறது.

ஏற்கெனவே தங்க விலையானது 146,000 ரூபாய் வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலரால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!