தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்!
நாட்டில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபாய் சரிவடைந்துள்ளது.

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபாய் சரிவடைந்துள்ளது.
இன்றையதினம்(11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 613,831 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,850 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 173250 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாயாக காணப்படுகிறது.